அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக, அலாஸ்கா (Alaska) நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
எனினும், பிற்பகல் பிற்பகல் 2:45 மணிக்கு சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.