Date:

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – புதிய மாணவர் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் 2025/07/26 மற்றும் 27 ஆந் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளதால், தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (இணைய வழி ஊடாக) கோரப்படுகின்றன.

ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் பாட நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்:

முதல் மூன்று வருடங்கள்

1. அடிப்படை இஸ்லாமியக் கற்கைகள்

2. அறபு மொழி

3. க.பொ.த உயர் தரம் (கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள்)

க.பொ.த உயர் தரத்திற்கு பின்னரான நான்கு வருடங்கள்

1. இஸ்லாமியக் கற்கைகளில் சிறப்புத் தேர்ச்சி

2. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்.

1. க.பொ.த. ( சா.த) பரீட்சையில் இஸ்லாம், தமிழ், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் மூன்று பாடங்களில் திறமைச் சித்திகளைப் (C) பெற்றிருத்தல். வர்த்தகப் பிரிவில் இணைவதற்கு மேற்குறிப்பிட்ட தகைமைகளுடன் கணிதம் அல்லது வரலாறு அல்லது வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் பாடத்தில் திறமைச் சித்தியைப் (C) பெற்றிருத்தல்.

2. 2008.01.31 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்.

3. தேக ஆரோக்கியமும், நற்பண்புகளும் உடையவராக இருத்தல்.

நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் நடைபெறும் நாளன்று பரீட்சாத்திகள் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்.

1. பிறப்புச் சாட்சிப் பத்திரம்

2. க.பொ.த. (சா.த) பரீட்சை பெறுபேற்று அட்டை

3. தேசிய அடையாள அட்டை

4. மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்

5. பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்

6. புலமைச் சான்றிதழ்கள்

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

* கல்வி, விடுதி வசதிகள் இலவசம்

* மாதாந்த உணவுக்கட்டணம் 15000 ரூபாய்

* சேர்வுக் கட்டணம் 20000 ரூபாய்

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய www.naleemiah.edu.lk என்ற இணைய தளத்தை நாடவும்.

ஆன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.07.21

மேலதிக விபரங்களுக்கு 076 372 7066

 

 

 

முதல்வர்,

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், பேருவளை.

2025.07.15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...