வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர். ஹமாஸால் வெடிக்கப்பட்ட வெடிபொருளால் தாக்கப்பட்ட ஒரு டாங்கிக்குள் அவர்கள் இருந்தனர்.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.