Date:

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. இந்நிலையில், 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இங்கு நாளொன்றுக்கு ஐந்து சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இந்தநிலையில், நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், தற்போது இது குறித்து விசாரித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...