Date:

கூகுள் புது அப்டேட்

இ மெயில் எனப்படும் மின்னஞ்சல் பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது இ மெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் இ மெயில் சேவை வழங்கினாலும் கூகுளின் இ மெயில் (ஜி மெயில்) தான் இதில் முதலிடம் வகிக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஜிமெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. மெயில் இன்பாக்ஸ்களில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய டேப் கீழ் கொண்டு வர ஜிமெயில் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு செய்யும் போது நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான மெயில்களை எளிதில் கண்டறிந்து நீக்கவோ வகைப்படுத்த முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்பாக்ஸ்களில் தேவையின்றி குவிந்து இருக்கும் மெசேஜ்களை பில்டர் செய்து தேவையான மெயில்களை மட்டும் எளிதில் பார்க்க முடியும் என்பதால் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இந்த வசதி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...