Date:

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

ராஜங்கனையே ஹமுதுருவோ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளிகளில் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சத்தாரதன தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த தேரர், ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திமை குறித்து நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் மனநல பிரிவில் முன்னிலையாகி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...

Breaking வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள்...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...