அளுத்கமையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் செல்லும் புகையிரதத்தில்,மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட இயந்திரப் பிரச்சினை காரணமாக பிரதான மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.