Date:

e-NIC குறித்து வௌியான செய்திகளில் உண்மையில்லை

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இந்தக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தரநிலைகள் மற்றும் செலவு-செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம் – சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

பேருந்து கட்டணத்தில் திருத்த…

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும்...

ஆப்கான் நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்

நெடுஞ்சாலையில் செலுத்தப்படும் எந்தவொரு வாகனத்திலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று...