Date:

பிரிக்ஸ் கொள்கைகளுடன் இணங்கினால் மேலும் 10% வரி உயர்வு

பிரிக்ஸ் அமைப்பின் “அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன்” தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

“பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறினார்.

2009 ஆம் ஆண்டு நடந்த முதல் உச்சிமாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களை பிரிக்ஸ் குழு ஒன்று சேர்த்தது. பின்னர் தென்னாப்பிரிக்காவை இந்த கூட்டமைப்பு சேர்த்தது. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...