பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் – 2025 ஆண்டு நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) பதிவுசெய்யப்பட்டு SLS 1732:2022 இன் கீழ் சான்றளிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் பாடசாலைளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு சுகாதார நாப்கின் பாக்கெட்டுகளை விநியோகிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சுதெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.