60க்கும் மேற்பட்ட டிப்ளமோ பட்டங்களை வழங்கிய “மேஸ்ட்ரோ கேட்வே கேம்பஸின் பட்டமளிப்பு விழா 2025” ஆனது கண்டி கரலிய மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கல்லூரி நிர்வாகிகளான இஷாக் மிஹ்லார் மற்றும் ருஷ்னி ரஸீன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதோடு இதில் 60 மேற்பட்ட டிப்ளோமா பட்டமளிப்புக்கள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வு குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கருத்து தெரிவிக்கும் போது… நாங்கள் வெறுமனே பட்டங்களையும் டிப்ளமோக்களையும் வழங்கும் நிறுவனம் அல்ல அதற்கு மாறாக இந்த டிப்ளமோ பெறுகின்ற வேளையிலேயே தொழிற்பயிற்சியையும் தொழில்நுட்ப நுணுக்கங்களையும் வழங்கி தொழில் பெறுவதற்கான முழுமையான தகமைகளையும் சேர்த்தே அவர்களை செதுக்கி வழி அனுப்புகின்றோம். இதனால் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய முயற்சியை அடைவது சாத்தியமாகின்றது. என்றனர்…
மேலும் இந்நிகழ்விற்கு ஆக்ஸ்போர்ட் கிராஜுவேட் கேம்பஸின் தலைவர் எம்.ஏ.எம் சப்ரி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக சஹீட் எம். ரிம்மி, இத்திஷான் எம். ஹுசைன்டீன், கலாநிதி அனஸ்லி வை. நியூமான், பாத்திமா ரிப்னா, எம்.டீ.எம். இம்ரான், முகம்மத் ஷபீன் பஸ்லுர் ரஹ்மான், செய்னப் ஷஹாப்தீன் மற்றும் ஹஸ்மா நவ்ஷாட் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் நிகழ்வை பாத்திமா முபாஷரா சிறப்புர தொகுத்து வழங்கினார்.