இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டார்.