Date:

தங்க முலாம் துப்பாக்கி: துமிந்தவின் பிணை மனுவுக்கு திகதி குறிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த மனுவை ஜூலை 14 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் சம்பத் மெண்டிஸ் வாதங்களை முன்வைத்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பான சாட்சியங்களை முன்வைக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும்,...

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...