Date:

இந்தியா – அமெரிக்கா மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.

சீனா உடனான ஒப்பந்தத்தையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். உண்மையில் ஒருபோதும் நடக்க முடியாத விஷயங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு நாட்டுடனும் உறவு மிகவும் நன்றாக உள்ளது.

நேற்றுதான் சீனாவுடன் கையெழுத்திட்டோம். எங்களிடம் அனைவரும் உள்ளனர். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் மட்டும் அனுப்ப உள்ளோம். அவர்கள் 25 வீதம், 35 வீதம், 45 வீதம் வரி செலுத்தப் போகிறார்கள். எங்களுக்கு எளிதான வழி அதுதான். எங்கள் அதிகாரிகள் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அவர்கள் சில நாடுகளுக்கு மட்டும் அவ்வாறு செய்ய விரும்புகிறார்கள். அதிகமான ஒப்பந்தங்களைச் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...