Date:

கட்டாரில் ஈரான் தாக்குதலின் சேத விவரம் இது தான்!

கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்புக்களும், காயங்களும் எவருக்கும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் தாக்குதலை அடுத்து நேற்று கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் குறித்து ஈரான் தெரிவிக்கையில், தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான பதிலடி இது என்றது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மோதல் அதிகரித்து வருவதால், சமீப நாட்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் ஆறு ஏவுகணைகள் என்றும் அமெரிக்கா 14 ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி தளம், 19 ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என கட்டார் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு சில மணிநேரத்திற்கு முன்னதாக, கட்டாரில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை “பாதுகாப்பான இடங்களுக்கு” செல்லுமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவுறுத்தியது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அத்துடன் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இஸ்ரேல் – ஈரான் தாக்குதலில் 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்ததாகவும் இருதரப்பு அரசு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...