Date:

Breaking: அதிகரிக்கும் போர் காரணமாக திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.

இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகனண தாக்குதலை நடத்தியது.

இதனால் கட்டார் மற்றும் குவைட் போன்ற நாடுகள் தங்களது வான்வெளியியை தற்காலிகமாக மூடியுள்ளன.

இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும்,...

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...