2022ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, நவம்பர் 21 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளார். அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அதனை, செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (22) அனுமதியளித்துள்ளது.
வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதம், தொலைக்காட்சிகளில் நேரடியாக அஞ்சல் செய்யப்படவுள்ளது. அதன்போது, சைகை மொழி பயன்படுத்தப்படும். இவ்வாறான யோசனையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே மு்னவைத்தார். அதற்கே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.