Date:

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும் அதனை மறுசீரமைக்கும் திட்டம் 2026 ஆம் ஆண்டு சிங்கள இந்து புது வருடத்திற்கு இலங்கை பஸ் போக்குவரத்து சபையினால் மக்களுக்கு விசேட பரிசாக புதிய மத்திய பஸ்தரிப்பிடமாக ஊருக்கு போய் வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் மேற்கொண்டகண்காணிப்பு விஷயத்துக்கு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற இக்கண்கானிப்பு பயணத்தின் போது சம்பந்தப்பட்ட பஸ் தரிப்பு நிலைய மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் மேல் மாகாண சபையினால் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை விட சிறந்த திட்டமொன்றை தயாரித்து, ஒரு வருட காலத்தினுள் இந்த மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டு அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த இடத்தில் நிலைமையை மிகவும் மோசமானது. பொதுமக்களுக்கு எவ்வித வசதிகளும் இல்லை. பஸ் வண்டிகள் மாத்திரம் தான் உள்ளன. ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் இலங்கையின் பிரதான 50 ஸ்தரிப்பு நிலையங்களை மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி...

இளஞ்சிவப்பு புதன்கிழமை

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய...

நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர...

Breaking துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச...