.இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 20,800 க்கும் மேற்பட்ட டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் டெங்கு நோய் தொடர்பில் 10 உயிரிழப்புகளும் 2021 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டெங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மழையுடனான காலங்களை கருத்திற் கொண்டு, எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறும் உங்கள் இடங்களை சுத்தமாகவும் நுளம்புகளின் பரவலுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வலியுறுத்தியுள்ளது.
டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்
- திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
- உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
- கடுமையான தாகம்
- நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
- கடுமையான வயிற்று வலி
- தூக்க நிலைமை
- நடத்தையில் மாற்றம் ஏற்படல்
- சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
- கறுப்பு நிற மலம் வெளியாதல்
- குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
- தலைசுற்றுதல்
- கைகால்கள் குளிரடைதல்