Date:

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் வெளியிட்ட விசேட அறிக்கை

இன்று (13) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், விரோதப் தரப்பினரிடமிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பான வீடுகளுக்கு அருகில் இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகிறது.

 

இஸ்ரேலும் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.

 

இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகிறது, மேலும் தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சமீபத்திய நிலைமை குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர...