எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 7.77 பில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடக் கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அழைப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபை மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட 20 தரப்பினர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாகச் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரையில் உரியப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லையெனக் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு மீண்டும் அவ்வாறான பாதிப்புகள் ஏற்படாத வகையில் வேலைத்திட்டங்களை உருவாக்க, பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.
Date:
பேர்ள் கப்பல் தீப்பிடித்த விவகாரம் – பேராயரின் மனு நவம்பரில் விசாரணைக்கு
