Date:

தீர்வுகள் ஊடாகவே எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு

விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே, எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப்பயணிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கமநலச்சேவை உத்தியோகத்தர்களுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று(22) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும். அதன் ஊடாகவே அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும். 

ஒருபோகம் மற்றும் இருபோகத்துக்கு மாத்திரமன்றி, பல சந்ததியினரை பயன் பெறச்செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும். இது தொடர்பில், விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும்.

விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அதன் ஊடாகவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சரியானதைச் செய்வது பாரிய சவாலாகும். அதற்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதுடன், முன்னோக்கிப் பயணிப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை அடைந்துகொள்ள முடியுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...