Date:

மீண்டும் கொரோனா : விமான நிலையத்தில் பாதுகாப்பு – நலிந்த ஜயதிஸ்ஸ

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தில் நடந்தது போன்ற அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

ஆனால் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்தே அந்த விடயம் தொடர்பில் அவதானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தியாவில் இருந்து புதிய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,009 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த நோயால் 4 பேர் இறந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமேசனின் கிளவுட் சேவைகள் உலகளாவிய ரீதியில் செயலிழப்பு

அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப சிக்கல்களால் உலகளாவிய ரீதியில்...

’போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளது’

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத்...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை...

அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதற்காக ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை...