Date:

வேலைநிறுத்தம் நியாயமற்றது!!

 

தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (16) நள்ளிரவு முதல் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள போக்குவரத்து அமைச்சு,

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் செய்தல் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

இந்த கோரிக்கைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தும், அவை செயல்படுத்தப்படாததற்கு திணைக்களத்தின் திறனற்ற தன்மையே காரணம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் உடனடி வேலைநிறுத்தம் மேற்கொள்வது, அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தவும், மக்களை பாதிக்கவும் முயல்வதாக உள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ரயில் சேவையை பராமரிக்க அமைச்சு மற்றும் அரசு அனைத்து வகையிலும் தலையீடு செய்யும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மார்ச் 12 முதல் அதிகளவு லிட்ரோ சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ...

திரிய்யாவின் சிறுசுடர் முதல் தேசத்தின் மாண்பு வரை: சவூதி ஸ்தாபக தினத்தின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றுப் பாய்ச்சல்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.   இன்று உலக அரங்கில் தனித்துவமான அடையாளத்துடன்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல்...