இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்தகாலங்களில் தங்கத்தின் விலை வரலாரு காணாத உச்சம் தொட்டமை தங்கம் வாங்க காத்திருநோருக்கு அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில் தங்கம் சற்று விலை குறைந்துள்ளமை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (15) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 255,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 234,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 195,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,250 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.