Date:

நாட்டில் அதிகரிக்கும் சின்னம்மை தொற்று ; தடுப்பூசிக்கு பற்றாக்குறை

நாட்டில் தற்போது சின்னம்மை (Chicken Pox) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும், வைத்தியசாலைகளில் தற்போது நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி பாற்றாக்குறை நிலவுவதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

 

தனியார் வைத்தியசாலைகளில் அதிகாரிகள் சின்னம்மை தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.

 

தடுப்பூசி விலை 7,500 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரை காணப்படுகிறது. அரசாங்க வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுகிறது.

 

இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளில் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் கூறுகையில், அண்மைய நாட்களில் சின்னம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

சின்னம்மை என்பது வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (VZV) தொற்றால் ஏற்படும் நோயாகும். இந்த வைரஸ் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடாத நபர்களிடமிருந்து மற்றையவர்களுக்குப் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களில் 90 சதவீதமானோருக்கு பரவக்கூடும்.

 

இந்த நோய் பொதுவாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். சின்னம்மையைத் தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை தடுப்பூசியைப் பெறுவதே என தெரிவித்துள்ளார்.

 

சின்னம்மை நோய் சாதாராணமானதாக காணப்பட்டாலும், கர்ப்பிணிப் பெண்கள், 12 மாதங்களுக்கும் குறைவான சிறுவர்கள், இளம் வயதினர், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...