Date:

புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவிப்பு

தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா நேற்று (19) குற்றஞ்சாட்டியிருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரியா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஷின்போ (Sinpo) பகுதியிலிருந்து கிழக்கு கடல் பரப்பில் குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நீர்மூழ்கி கப்பலிலிருந்து குறித்த ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இதற்கான வசதிகள் வடகொரியாவிடம் காணப்படுவதாகவும் தென்கொரிய தரப்பினர் நேற்று (19) குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...