Date:

இன்று காலை நுவரெலியாவில் கோர விபத்து ; 11 பேர் பலி, பலர் படுகாயம்

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...