வெலிமடை, டயரபா பகுதியில் நேற்று இரவு தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 20 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.