கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
ஏப்ரல் 6ஆம் திகதியன்று 38 வயதில் காலமான மறைந்த தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே சமந்த ரணசிங்க பதவியேற்றுள்ளார்.
முன்னாள் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளரான ரணசிங்க, தேசிய மக்கள் சக்தி (NPP) பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.