டெங்கு அபாயம் – முன்பள்ளி பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான ஆடைகள் அவசியம்

நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து அவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் கோருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஆரம்பப் பிள்ளைப் பருவ தேசிய வாரக் கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் நுளம்பு கடியியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டதுடன், அதற்கமைய கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

அதற்கமைய, முன்பள்ளி சிறுவர் சிறுமிகளையும் நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பதற்காக கைகால்கள் மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்,

இது குறிப்பாக முன்பள்ளி குழந்தைகளுக்குப் பொருந்தும். ஏனெனில், முன்பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தக்கூடிய நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். நுளம்பு கடியியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் நான் அனைத்து பெற்றோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி பாடசாலைகளுக்குள்ளும் காணப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில்...

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது...