Date:

தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக மாலபேயில் தனது புதிய கிளையை திறக்கும் Healthguard

Sunshine Holdings PLCஇன் சுகாதாரத் துறையின் துணை நிறுவனமாகவும் இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகளை வழங்கும் வாடிக்கையாளர் விற்பனைச் சங்கிலியான Healthguard தனது 16வது விற்பனை நிலையத்தை பொதுமக்களுக்காக தலாஹேன, மாலபேயில் திறந்துள்ளது. இந்த மைல்கல் 2025 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட முதல் Healthguard மருந்தகத்தைக் குறிக்கிறது மற்றும் கொழும்புக்கு வெளியில் புறநகர் சமூகத்தின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட சங்கிலியின் மூலோபாய விரிவாக்கத்தையும் இது குறிக்கிறது. புதிதாக நிறுவப்பட்ட இந்த மருந்தகம் வாடிக்கையாளர் சங்கிலியின் தலைமை செயற்பாட்டு அதிகாரி ஃபர்மான் நிசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதம செயற்பாட்டு அதிகாரி, இலங்கை முழுவதும் சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் Healthguard கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். எங்கள் நோக்கம், வாடிக்கையாளரை எல்லாவற்றின் மையமாக வைத்து முழுமையான வாடிக்கையாளர் சுகாதார தீர்வுகளை வழங்குவதாகும் என நிசார் தெரிவித்தார்.

மேலும், உச்ச தரமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பேணுவதில் நாங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் அனுபவமும் நம்பகமானதாகவும், நிம்மதியளிப்பதாகவும் இருக்கும் என்பதை உறுதி செய்கிறோம். என அவர் மேலும் தெரிவித்தார். இந்த தொலைநோக்குப் பார்வையின் மையமாக Healthguardஇன் தனித்துவமான Purple Service உள்ளது.

இது வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான சேவையை வழங்குவதற்கான வர்த்தக இலச்சினையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சிறப்பு சேவை மாதிரியாகும். Purple Service ஒவ்வொரு தொடர்பு புள்ளியிலும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலை உறுதி செய்கிறது. இது, மிக துல்லியமாக நிர்வகிக்கப்படும் மருந்துப் பாதுகாப்பு நெறிமுறைகளால் ஆதரிக்கப்படுகிறது. இது Healthguardஇன் நம்பிக்கை மற்றும் கவனிப்பு என்ற வாக்குறுதியை வலுப்படுத்துகிறது.

தனது ஆரம்பம் முதலே நம்பகமான பெயராகத் திகழும் Healthguard, உள்ளூர் மருந்து வாடிக்கையாளர் விற்பனைத் துறையில் ஒரு முன்னோடியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தரமான சுகாதாரப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் மீது அசைக்க முடியாத கவனம் செலுத்துவதற்காக அறியப்படும் Healthguard, தொடர்ந்து தொழில்துறையில் புதிய தரநிலைகளை அமைத்து வருகிறது. மாலபேக்கு இந்த சங்கிலி விரிவடைவது, உயர்தரமான சேவை மற்றும் அணுகல் தன்மை குறித்த தனது வாக்குறுதியைப் பேணுவதோடு புதிய வாடிக்கையாளர் தளங்களை சென்றடைவதற்கான நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கனமழைக்கு வாய்ப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும்...

கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்

கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள்...

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவிப்பு

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373