Sunshine Holdings PLCஇன் மருந்து உற்பத்தி பிரிவான Lina Manufacturing Limited, தனது புதிய வர்த்தக இலச்சினையை வெளியிட்டுள்ளது – ஒரு சிறந்த வர்த்தக இலச்சினையானது, நிறுவனத்தின் வளர்ச்சி, தூரநோக்குப் பார்வை மற்றும் மதிப்பிடத்தக்க, தரமான சுகாதார தீர்வுகளை வழங்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
Linaவின் வர்த்தக இலச்சினைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் இந்த புதிய இலச்சினை, நிறுவனத்தின் பிரதான நோக்கத்துடன் இணைந்த ஒரு நவீன அடையாளத்தைக் கொண்டு ஒரு புதிய ஆரம்பத்தை சின்னமாகக் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு, ஒரு metered-dose இன்ஹேலர் (MDI) மற்றும் ஒரு capsule ஆகியவற்றின் வடிவங்களை ஒருங்கிணைக்கிறது, இது Linaவின் ஒரு முன்னோடி உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர் என்ற பங்கை வலியுறுத்துகிறது. Sunshine Holdingsஇன் பெருநிறுவன இலச்சினையில் (Logo) இருந்து பெறப்பட்ட ஒரு பகுதியாகும். இது சூரியனின் சக்தியை பிரதிபலிப்பதுடன், இது வாழ்க்கை, வளர்ச்சி, இணைப்பு மற்றும் உயிர்ப்பைக் குறிக்கிறது. Teal colour தேர்வு, தெளிவு, அமைதி மற்றும் திறந்த மனப்பான்மை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அழகு மற்றும் நாகரிகத்தையும் வெளிப்படுத்துகிறது.
Sunshine Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் கூறுகையில், “இன்று Sunshine Holdingsஇல் உள்ள அனைவருக்கும் ஒரு பெருமையான நாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, Lina உடனான நமது பயணம் ஆரம்பமாகியது, அதன் பின்னர் குறிப்பிடத்தக்க சாதனைகளை எட்டியுள்ளோம். Lina Manufacturing நமது குழுமத்தின் எதிர்காலத்தின் முக்கியமான பகுதியாகும், மேலும் அதன் தாக்கத்தை உயர்த்தும் வகையில் கூடுதல் முதலீடுகளை செய்ய நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். நாங்கள் முன்வைக்கும் மாற்றங்களுடன், Lina இலங்கையின் முன்னணி சுவாச மருந்து தயாரிப்பு நிறுவனமாக மாற வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் லட்சியமுடையவர்கள், மேலும் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை நாங்கள் காண்கிறோம்.” என தெரிவித்தார்.
இலங்கையின் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பகமான சுவாசத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக, Lina Manufacturing குழுமத்தின் முக்கிய பொறுப்பான தொழில்முனைவோட்டத்தை பிரதிபலிப்பதில் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. Sunshine Holdings, ஒவ்வொரு Lina தயாரிப்பிலும் தரம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது, இது நாட்டின் சுகாதார அமைப்புக்கு ஒத்துழைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Lina Manufacturingவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் ரி. சயந்தன் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஒரு சுயாதீனமான மருந்து உற்பத்தித் துறையை உருவாக்குவதில் இலங்கை அதிக கவனம் செலுத்தும் இந்தத் தருணத்தில், எங்கள் புதிய வர்த்தக இலச்சினையை வெளியிடுவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இந்தப் புதிய அடையாளம், முன்னணி தொழில்நுட்பம் மற்றும் தரமான பொருட்கள் மூலம் மட்டுமல்லாமல், இலங்கை மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் சேவை செய்யும் புதிய நோக்கத்துடன், இந்த மாற்றத்தை வழிநடத்த Lina தயாராக இருப்பதைக் குறிக்கிறது.” என தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில், Lina Manufacturing 4 பில்லியன் ரூபாய் வருவாயை எட்டியுள்ளது மற்றும் 3 மில்லியனுக்கும் அதிகமான MDI அலகுகளை உற்பத்தி செய்துள்ளது. இது இலங்கையர்களுக்கு சுவாச பராமரிப்பு வசதிகளை உறுதி செய்வதில் நிறுவனத்தின் முக்கியப் பங்கை உறுதிப்படுத்துகிறது.
Lina Manufacturing தொடர்பாக
2021 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட Lina, Sunshine Holdings PLC நிறுவனத்தின் கீழ் இலங்கையின் முதலாவதாக முழுமையாக ஒருங்கிணைந்த சுகாதார நிறுவனமான Sunshine Healthcare Lankaவின் உற்பத்தி கிளை ஆகும். Lina முதன்மையாக சுவாசத் துறையில் செயல்படுகிறது, காப்புரிமை பெற்ற Dry-powder inhalers (DPIs) இல் நிபுணத்துவம் பெற்றது, மேலும் தற்போது உள்ளூர் சந்தையில் Metered dose inhalers (MDIs) இன் ஒரே உற்பத்தியாளராகும். Lina Manufacturing, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு பல்வேறு சுவாசப் பொருட்களை வழங்குகிறது, மேலும் தற்போது ஆஸ்துமா சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆறு வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, அதாவது Dry-Powder capsules, மாத்திரைகள், Nasal Sprays, சாதனங்கள், Metered dose inhalers மற்றும் கிரீம்கள். உள்ளூர் சந்தைக்கு மேலும் அதிநவீன தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்கிறது. தற்போது, Lina Manufacturingஇன் உற்பத்தி நிலையம், இலங்கையில் உள்ளூர் ரீதியில் தயாரிக்கப்பட்ட MDI தயாரிப்புகளுக்கான WHO Good Manufacturing நடைமுறைகளுக்கு (GMP) சான்று பெற்ற ஒரேயொரு உற்பத்தி ஆலையாகும்.