Date:

மின்சார கட்டணங்கள் மேலும் குறையுமா? – வெளியான அறிவிப்பு

 

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி, செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது, இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது.

இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது.

2024 இல் மின்சார கட்டணங்கள் இரு முறைகள் திருத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 21.9% மற்றும் ஜூலை மாதத்தில் 22.5% இனால் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, வருடத்தின் இரண்டாவது பாதியில் மாதாந்திர இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு...

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட...

அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்,...