பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், 40 ரயில் சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட ரயில் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.