Date:

தேநீர், சீஸ் விலைகள் அதிகரிப்பு

பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள்  இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.

இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொட்டு உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்டு வருகின்றனர்.

தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான அரிசியையும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

அரிசி விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால், மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த மாட்டோம்.

அரிசி பற்றாக்குறை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...