Date:

கேகாலை வைத்தியசாலையில் வைத்தியரை தாக்கிய நபர் கைது!

கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் வைத்தியசாலைக்கு முன்னால் சந்தேக நபர் வைத்தியரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த விசேட வைத்தியர் தற்போது கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...