சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாளை நடைபெறவிருந்த தமது அடையாள வேலைநிறுத்தத்தை கைவிட சுகாதார உத்தியோகத்தர்கள் சம்மேளனம் (FHP) முடிவு செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் (GMOA) நேற்று அமைச்சருடனான சந்திப்பிற்குப் பிறகு திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.