வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, மகா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கு, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் அதற்கு அடுத்த நாளான எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு, சபரகமுவ, ஊவா மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் 27ஆம் திகதி வழமை போல் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளுக்கு மார்ச் 01ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.