நீதிமன்றத்துக்குள் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் உடலைப் பெற முன்வரவில்லை என செய்திகள் வௌியாகியுள்ளது.
இதன் காரணமாக அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் உடலை கையளிப்பதற்காக உறவினர்கள் வருகைக்கு தாம் காத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரபல குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ நேற்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.