Date:

லிட்ரோ திருத்தம்: நிதியமைச்சு மௌனம்

பெப்ரவரி மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தை எரிவாயு விலைக்கேற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் இருப்பினும், பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், மக்களை கருத்திற்கொண்டு கடந்த சில மாதங்களாக, எரிவாயு விலையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென லிட்ரோ நிறுவனம் அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...