Date:

மு.கா எம்.பி மீது தாக்குதல்

கனகராசா சரவணன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நழீம் மீது சனிக்கிழமை (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர்  தாக்குதல்  மேற்கொண்டதையடுத்து அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காயமடைந்த பாளுமன்ற உறுப்பினர்  முகமட் சாலி நழீம் தெரிவிக்கையில் – அரசியல் பிரச்சினைகள் காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்பாகவைத்து எனது தந்தை, சகோதரர் மீது இன்று(8) அதிகாலை 6.00 மணியளவில்  கலீல் என்பர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி   ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள் சென்ற போது பின்னால் வந்த காதர் என்மீது மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதுடன் பொலிஸ் நிலையத்துக்குள்ளும் தாக்க முற்பட்டார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் தள்ளுப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...