Date:

 இன்று  இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

பிப்ரவரி 4 ஆம் திகதியான இன்று, வளமான கலாச்சார பாரம்பரியம், பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் அன்பான மக்களுக்கு பெயர் பெற்ற தீவு நாடான இலங்கை, அதன் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

1948 பிப்ரவரி 4 இல், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து அரசியல் ரீதியாக சுதந்திரம் பெற்றதன் 77 வது ஆண்டு நிறைவை இன்றைய தினம் எமது தாய் நாடான இலங்கை கொண்டாடுகிறது.

இது அனைத்து இலங்கையர்களின் இதயங்களிலும் பெரும் முக்கியத்துவத்தை கொண்ட ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

77வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்தார்.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஈடுபடுத்தப்படும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா தெரிவித்தார்.

இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படும் நாடொன்றை உருவாக்குதல் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் முதன்மை நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

 

இதேவேளை, 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கொழும்பு பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதி மூடல்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...