தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தனது நிறுவனத்தின் சில கொள்கலன்கள் சோதனையின்றி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே மேல் மாகாண ஆளுநர் விசாரணைக்கு முறைப்பாடு செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.