Date:

வரலாற்றில் முதல் முறையாக பொலிஸ் நிலையங்களில் STF

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கொழும்பு நகரில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பதிவாகியுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடுகளை தடுப்பதற்கு உதவி தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையின் சிறிய குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இருப்பினும், பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையினரை அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அவசர வீதித் தடைகளை நிறுவுவதன் மூலம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை நிறுத்துவதோடு, நடமாடும் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...