Date:

ரிஷாட் பதியுதீனின் மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோததரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் அவர்களுடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை இம்மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கோரி குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனு இன்று (12) விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

    எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.   பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும்...

குருநாகல் வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்...

பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம்...

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்பைப்...