Date:

இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உள்ள 1,000 கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாம் 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக . இலங்கையில் உள்ள இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முக்கிய இறக்குமதியாளர்கள் தங்களுக்கு ஒரு கொள்கலனுக்கு 100,000 வீதமும் சிலருக்கு அதிகரித்த போக்குவரத்துக் கட்டணங்கள், துறைமுக தாமதக் கட்டணம் மற்றும் கூடுதல் பணியாளர் தேவைகள் காரணமாக ரூ. 300,000 வரையில் செலவு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தாமதமான கொள்கலன்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கொள்கலன்களை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், இறக்குமதியாளர்கள் தமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினங்களை நுகர்வோருக்கு கடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த நிதிச்சுமை தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என சுட்டிக்காட்டிய இறக்குமதியாளர்கள், கொழும்பு துறைமுகத்தின் திறமையின்மை காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம்...

கொழும்பு காலி முகத்திடலில் விற்பனை நிலையங்களை அகற்றுவதில் குழப்பம்

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று...

ஹல்கஹகும்புற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது!

பொரளை, ஹல்கஹகும்புரவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் சாரதி,...

இந்தியாவுக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்கும் அமெரிக்கா

இந்திய இராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஓர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிக்கொப்டர்களில்,...