இந்த அரசாங்கத்துக்கு நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து குறைந்தபட்சம் பொருளாதாரத்தைக்கூட முகாமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற
“எதிர்க்கட்சியிலிருந்து மூச்சு நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் “ஜன கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 31 ஆவது கட்டம் நேற்று
(11) முன்னெடுக்கப்பட்டது.
இருபது இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த அத்தியாவசியமான மருத்துவமனை உபகரணங்கள் தந்திரிமலை பிரதேச மருத்துவமனைக்கு நன்கொடையாக நேற்று (11) வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை
சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன்
அரசாங்கத்திடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரித்து வருவதாகவும் மக்கள் ஆதரவற்ற நிலையில்
உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.