பெற்றோல் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஐயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பொருட்களுக்கு அதிரடியாக விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.