சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை ஆகவே அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடம் இருந்தால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
இரண்டு வருட காலம் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு முதல் செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.
மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அதனை மக்கள் புரிந்துக் கொள்வார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.